சென்னை:மாண்டஸ் புயல்(Mandous cyclone) காரணமாக நாளை வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - School and colleges will be closed on December 9
மாண்டஸ் புயல் காரணமாக நாளை எட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
school leave
இதனிடையே, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், சென்னை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருப்பூர், நாமக்கல், செங்கல்பட்டு , திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க:மாண்டஸ் புயலால் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையத்தின் முழு தகவல்!