தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து நடக்கும் கல் குவாரி லாரி விபத்து: மீண்டும் ஒருவர் உயிரிழப்பு - கல்குவாரி லாரி விபத்து

செங்கல்பட்டு: அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் கல் குவாரி லாரி விபத்தினால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கல்குவாரி லாரி விபத்து
அடுத்தடுத்து நடக்கும் கல்குவாரி லாரி விபத்து: மீண்டும் ஒருவர் உயிரிழப்பு

By

Published : Apr 17, 2021, 1:15 PM IST

Updated : Apr 17, 2021, 1:25 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணி, இரு நாட்களுக்கு முன்னதாக, கல்குவாரி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, இன்று (ஏப்.17) செய்யூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு விபத்தில், இளைஞர் ஒருவர் பலியாகி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்னாடு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (26) என்பவர், நாகமலையிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இன்று ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலை, தனது இருசக்கர வாகனத்தில், பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே அசுர வேகத்தில் வந்த கல்குவாரி லாரி ஒன்று, லோகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகநாதனை, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லோகநாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு நாட்களில், தொடர்ந்து கல்குவாரி லாரிகளால் இருவர் உயிரிழந்த சம்பவம், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Apr 17, 2021, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details