சென்னை:பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வரும் பெண், ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி பெண் காவலரின் மூன்று வயது குழந்தை உடல்நலக் குறைவால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது ரயில்வே காவலர் ஒருவர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெண் காவலருக்கு தெரியவந்தது.