செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள அருள்நகர், ஜெகதீஷ் நகர் ஆகிய பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்தக் குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. சில வீடுகளின் உள்ளேயும் மழைநீர் புகுந்துள்ளது.