செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தில் சுந்தர விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இதனிடையே, கோயில் நிலத்திற்கு மற்றொருபுறம் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாக வீடு கட்டுவதற்காக, கோயிலுக்குச் சொந்தமான நிலப்பகுதியில் பாதை அமைக்க முயன்றுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சூனாம்பேடு - தொழுப்பேடு செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.