செங்கல்பட்டு: திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட பொன்மார் ஊராட்சியில் பொன்மார்-தாழம்பூர் இணைக்கும் சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியின்போது ஒப்பந்ததாரர் போதிய பாதுகாப்பு செய்யாததால் கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான இன்பகுமார் என்பவர் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பள்ளத்தில் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை மறியல்
இன்பகுமாருக்கு நீதி வேண்டி உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மேடவாக்கம்-மாம்பாக்கம் பிரதான சாலையான பொன்மாரில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தனியார் காண்ராக்டரை கண்டித்து சாலை மறியல் தகவல் அறிந்து சென்ற தாழம்பூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வரவேற்கத்தக்கது - எம்.பி சுப்பராயன்