தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் - அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம்: காவல் ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்ததை கண்டித்து வணிகர்கள், பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் - அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் - அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Mar 9, 2020, 11:41 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டவர் சரவணன், இவர் பொறுப்பேற்ற பிறகு இப்பகுதியில் விபத்து, திருட்டு, வழிப்பறி போன்ற முக்கிய குற்றங்கள் எதுவும் நடக்காமல், சமூக விரோதிகள் இப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தார்.

இந்தக் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படாத வகையில் மின் விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவற்றை பதித்துள்ளார். இவரது நடவடிக்கைகளால் இப்பகுதியில் அடிக்கடி திருட்டு நடப்பது வெகுவாக குறைந்துள்ளது. இவர் காவல்துறை ஆய்வாளர் என்றாலும், இப்பகுதியிலுள்ள மக்கள் எளிதில் தொடர்புகொள்ளும் விதமாக, மக்களோடு மக்களாக பழகிவந்தார். இது அப்பகுதி மக்களிடையே அவருக்கு நன்மதிப்பு இருந்தது.

இந்நிலையில் இவரை இன்று தமிழ்நாடு அரசு பணியிடமாற்றம் செய்துள்ளதால் பெரும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்களும் வியாபாரிகளும், அச்சிரபாக்கம் பஜார் வீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் - அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

இதையும் படிங்க:’சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்’

ABOUT THE AUTHOR

...view details