செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில், அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக சில வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க, கல்பாக்கம் கதிரியக்க பகுதிகளுக்கான உள்ளூர் திட்டக் குழுமம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் ஆணையராக, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளார். இந்நிலையில், திட்ட குழுமத்தின் ஆணையர் சார்பாக, செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு குறிப்பானை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள, திருக்கழுக்குன்றம் ஊராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி உள்ளிட்ட 14 கிராமங்களில் எந்தவிதமான பத்திரப் பதிவும் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.