சென்னை தாம்பரத்தை அடுத்த மன்னிவாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்திவருபவர் வினோத். கடந்த 3 நாள்களுக்கு முன் வினோத்திடம் ரவுடி சிலம்பரசன் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓட்டேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், கூடுவாஞ்சேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை மிரட்டல் விடுத்த சிலம்பரசன் தேடப்பட்டுவந்தார்.
இந்நிலையில் இரும்புலியூர் பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் தப்பிச்செல்ல முயன்ற நிலையில், சிலம்பரசனைக் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மூன்று கைபேசி, கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.