தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தீவிர வாகன சோதனை - பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன்

செங்கல்பட்டு: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் வாகன சோதனை
போலீசார் வாகன சோதனை

By

Published : Jun 2, 2021, 4:01 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஒரு மாத காலமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சென்னைக்கு அடுத்தபடியாக தொற்றில் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் மாறி மாறி இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். அத்தியாவசியமின்றி வாகனத்தில் வருபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர்.

குறிப்பாக, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனக் கூறி, காவல் துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (ஜூன்.02) பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில் காவல் துறையினர் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் இதுவரை அத்தியாவசியம் இன்றி வெளியே சுற்றித் திரிந்த 900 இருசக்கர வாகனங்களும் 50 நான்கு சக்கர வாகனங்களையும் தாம்பரம் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழையும் வாகன ஓட்டிகளிடம் இ-பாஸ் உள்ளதா எனவும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details