செங்கல்பட்டு:திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் முனி சேகர். இவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல் துறை உயர் அலுவலர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பணிபுரிந்த வேறு சில காவல் நிலையங்களில், மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இவர் மீது பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க, வேற்று மாநிலத்திற்குச் செல்வதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பொழுது, குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல் அலுவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உடன்வந்த காவல் அலுவலரை முனி சேகர்தான் தவறுதலாகச் சுட்டுவிட்டார் என்ற பரபரப்பு அப்போது எழுந்தது.
பெண்ணுடன் ஆபாச சாட்டிங்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி சென்னைக்குச் சென்றார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருக்கழுக்குன்றத்திற்கு வந்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.