தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - pocso filed against sivashankar baba

சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு
சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

By

Published : Jun 13, 2021, 11:40 AM IST

Updated : Jun 13, 2021, 12:38 PM IST

11:31 June 13

சிவசங்கர் பாபா மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது அவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில்ஹரி சர்வதேசப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியின் நிறுவனர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா ஆவார்.

பாபாவுக்கு போக்சோ

இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் அடுக்கடுக்காக பாலியல் புகார்களை முன்வைத்தனர். அந்தப் புகாரின் பேரில் நேரில் ஆஜராகுமாறு சிவசங்கர் பாபா உள்ளிட்டோருக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.

அவர் மாரடைப்பு காரணமாக உத்தரகாண்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

இந்நிலையில் முன்னாள் மாணவிகளின் மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் இன்று (ஜூன் 13) வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Last Updated : Jun 13, 2021, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details