தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் வழிப்பறி - சிசிடிவி மூலம் சிக்கிய இளைஞர் - குற்றச் செய்திகள்

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்
வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்

By

Published : Aug 20, 2021, 7:50 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர், ரயில் நகர், திருக்கழுக்குன்றம், கொத்திமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன.

இது குறித்து காவல் நிலையங்களில் புகார்கள் குவியத் தொடங்கின. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

குற்றவாளி கைது

விசாரணையில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது செங்கல்பட்டு அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (29) என்பது தெரியவந்தது. மேலும், இவர் செங்கல்பட்டு பரனூரிலுள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்

தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 38 சவரன் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details