செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா சிட்டி, சில்வான் கவுண்ட்டி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வருபவர் பிரசதி சிங். இவர் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது சிறுவயது முதலே மரம் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் தனது பெற்றோர் உதவியுடன் மரக்கன்றுகளை நட்டு வந்தார். ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாகக் கொண்டுள்ள இவர், இதுவரை 13 ஆயிரத்து 500 பழமர கன்றுகளை நட்டுள்ளார்.
பிரதான் மந்திரி பால புரஸ்கார் விருது: சிறுமியுடன் உரையாடிய பிரதமர்! - காணொலி மூலம் பேசிய மோடி
செங்கல்பட்டு: பிரதான் மந்திரி பால புரஸ்கார் விருது பெற்ற சிறுமியுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசினார்.
![பிரதான் மந்திரி பால புரஸ்கார் விருது: சிறுமியுடன் உரையாடிய பிரதமர்! pm modi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10386952-985-10386952-1611653405772.jpg)
pm modi
சிறுமியுடன் உரையாடிய பிரதமர்
நாட்டின் 72ஆவது குடியரசு தினமான இன்று, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான, பிரதான் மந்திரி பல் புரஸ்கார் விருதுக்கு சிறுமி பிரசதி சிங் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, பிரசதியுடன் பிரதமர் மோடியுடன் நேற்றிரவு (ஜனவரி 25) காணொலி காட்சி மூலம் உரையாடினார். பின் சிறுமியின் செயலுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.