தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பங்க் காவலாளி வெட்டிக்கொலை - செங்கல்பட்டு செய்திகள்

பெட்ரோல் பங்கில் காவலாளியாக பணியாற்றிய முதியவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் வாட்ச்மேன் குத்திக்கொலை.  petrol bunk  chengalpattu petrol bunk watchman murder  petrol bunk watchman murder  chengalpattu news  chengalpattu latest news  பெட்ரோல் பங்க்  செங்கல்பட்டு செய்திகள்  செங்கல்பட்டு பெட்ரோல் பங்க் வாட்ச்மேன் வெட்டிக் கொலை
பெட்ரோல் பங்க் வாட்ச்மேன் வெட்டிக் கொலை

By

Published : Jun 18, 2021, 11:04 AM IST

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பாண்டிச்சேரியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன், பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கட்டுமான வேலைகளுக்குக காவலாக, மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற முதியவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன் 17) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பாண்டித்துரையை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பாண்டித்துரை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுசெய்த கடையின் உரிமையாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details