செங்கல்பட்டு மாவட்டத்தில் குருவன்மேடு, ரெட்டிப்பாளையம் ஆகிய இரு இடங்களிலுள்ள தரைப்பாலங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால், போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் 10 கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனால், இதனை துளிகூட பொருட்படுத்தாத நபர் ஒருவர், பாலத்தின் மீது செல்லும் நீரில் குஷியாக 'குஷி' பட ஜோதிகா போல குளித்துள்ளார். இன்னும் சிலர், ஹாயாக காலை நீட்டி பாலத்தில், ஆபத்தை உணராமல் உட்கார்ந்து துணிகளை துவைத்தும் வருகின்றனர்.