தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுராந்தகத்தில் தேர்தலை புறக்கணித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! - Chengalpattu district election boycott protest

செங்கல்பட்டு: மதுராந்தகம் அப்துல் கலாம் நகரில் அடிப்படை வசதிகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகத்தில் தேர்தலை புறக்கணித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
மதுராந்தகத்தில் தேர்தலை புறக்கணித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Apr 6, 2021, 6:19 PM IST

சட்டப்பேரவை நடைபெறும் நாளான இன்று (ஏப். 6) சில பகுதிகளில் தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்குள்பட்ட 24 வார்டு உள்ளது. அதில், அப்துல் கலாம் நான்காவது வார்டு பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அடிப்படை கழிவுநீர், கால்வாய், குப்பை அகற்றப்படாமல் வீட்டு வரி கொடுக்காமல், மின் பிம்பங்கள் வசதிகள் செய்து தரப்படவில்லை உள்ளிட்ட குறைகளை கூறியுள்ளனர்.

மதுராந்தகத்தில் தேர்தலை புறக்கணித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தலை புறக்கணிப்பதாக ஆர்ப்பாட்டம்

ஆண்கள், பெண்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தெருவின் நுழைவுப் பகுதியில், ஒன்றுகூடி வாக்காளர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இவர்களுடன் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தூத்துக்குடியில் பட்டா வழங்காததை கண்டித்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!'

ABOUT THE AUTHOR

...view details