செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்துள்ள சிற்றூர், கள்ளபிரான்புரம். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊருக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், எந்தப் பேருந்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்று அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளும் நின்று செல்வதில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு. இதனால் கொதிப்படைந்த கிராம மக்கள் இன்று டிச.26 காலை 11 மணியளவில், அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.