தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் உண்டியலில் நூதனத் திருட்டு - ஒருவர் கைது - குற்ற செய்திகள்

செங்கல்பட்டு: அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் உண்டியலில் நூதனமுறையில் பணம் திருடியவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஒருவர் கைது
ஒருவர் கைது

By

Published : May 29, 2020, 5:59 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் உள்ள உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய மாணிக் பாட்ஷா(22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாணிக் பாட்ஷா என்பவர், அச்சரப்பாக்கம் பஜார் பகுதியில் சுற்றித்திரிந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் அச்சரப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இரண்டு தினங்களாக அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஆட்சீஸ்வரர் கோயிலில் நூதன முறையில், உண்டியலில் இருந்து பணம் திருடியது தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் - சத்தீஸ்கர் அரசு

ABOUT THE AUTHOR

...view details