பொங்கலை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறது. கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்களுடன் ரூ.2,500 ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் சோத்துப்பாக்கம் பகுதியில், செய்யூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.ராஜீ பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.
பொங்கல் பரிசுத்தொகையை எண்ணிப்பார்த்த மூதாட்டியால் கலகலப்பு! - மூதாட்டி
செங்கல்பட்டு: பொங்கல் பரிசுப்பணம் பெற்ற மூதாட்டி ஒருவர் அங்கேயே நின்று பணத்தை எண்ணிப் பார்த்ததால் மற்ற பயனாளிகள் சிரித்து ஆரவாரமிட்டனர்.

அப்போது ரேஷன் கடையில் வரிசையில் நின்றிருந்த அருங்குணத்தாள் என்ற மூதாட்டி, தனக்கு இன்னும் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்தார். உடனே அவரை அழைத்த அதிகாரிகள் அவருக்கு பரிசுப் பொருட்கள் அடங்கிய பையையும், ரொக்கப் பணத்தையும் வழங்கினர். பணத்தை வாங்கிய மூதாட்டி அங்கேயே நின்று நிதானமாக எண்ணிப்பார்க்க ஆரம்பிக்க, அங்கு நின்றிருந்த மற்றவர்கள் பலமாக சிரித்து விட்டனர். இதனால் வெட்கம் தாளாமல் மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: ’என்னை எதிர்த்து எடப்பாடியே போட்டியிட்டாலும் பின்வாங்க மாட்டேன்’