தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை இறப்பு - சுகாதாரத்துறை இயக்குனருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மதுராந்தகம் அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Nurses
Nurses

By

Published : Sep 27, 2022, 4:12 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், ஆண்டார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா, பிரசவத்திற்காக மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மருத்துவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி பிரசவம் பார்த்து, குழந்தை பிறந்தாக தெரிகிறது.

ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. மருத்துவர்களின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து புஷ்பாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்... 2 பேர் கைது...

ABOUT THE AUTHOR

...view details