செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கத்திலுள்ள குயிக் போட்ச் கையுறை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிகேட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த பிகார், உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர், தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டி அனுமதி கேட்டு வந்தனர். அவர்களிடம் செங்கல்பட்டு வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.