செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் நான்கு நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து மதுராந்தகம் நகராட்சி உள்ள அனைத்து பகுதிக்கும் சீல்வைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே காவல் துறையினர் ரோந்து சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இதனை மீறியும் மதுராந்தகம் நகருக்குள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களைப் போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளர் ஆனந்தராஜ் பிடித்துள்ளார். அவர்களைப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் வரையப்பட்ட கரோனா ஓவியம் அருகே நிற்கவைத்துள்ளனர்.