செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதியதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2004ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது. பின்னர், நிலம் ஆக்கிரமிப்பு பணிக்காக கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிலம் அனைத்தும் கையகப்படுத்தப்பட்ட பின் பணிகள் தொடங்கியது. இது மட்டுமில்லாமல் இன்னும் பல மாவட்டங்களுக்கு புறவழிச் சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் 2 யூ வடிவ மேம்பாலங்கள் 108 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.