செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கெண்டிரச்சேரி பகுதியில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனர்.
இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுக நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், அம்மா நகரும் நியாயவிலை கடையை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார்.
அம்மா நகரும் கூட்டுறவு நியாயவிலைக் கடை தொடக்கம்!
இதில், மாவட்ட மகளிரணி செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.அப்பாதுரை, பொதுக்குழு உறுப்பினர் கிருபாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மக்களின் கஷ்டங்களை அறிந்து நீண்ட தொலைவு சென்று ரேஷன் பொருள்களை வாங்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் நியாயவிலைக் கடைக்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை