செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வீரணகுண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் தச்சு தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி வசந்திக்கும் (36) இவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படும் நிலை இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பார்த்தசாரதியின் குடிப்பழக்கத்தால் தகராறு ஏற்பட்டதையடுத்து கணவன், மனைவி இருவருக்கும் தகராறு முற்றியது.