செங்கல்பட்டு:மதுராந்தகம் தேரடித் தெருவில் பிரவுசிங் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது.
ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு எப்போதும் பணியில் இருப்பர். மேலும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இங்கு வந்து சென்ற வண்ணம் இருப்பர்.
இந்நிலையில் நேற்று (ஜன 22) கடையின் மேசையில் வைக்கப்பட்டிருந்த ஊழியரின் செல்போன் மாயமாகியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.