தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ - sengalpattu district news

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான நேற்று (ஜூன் 3) எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

mla-who-provided-welfare-assistance
mla-who-provided-welfare-assistance

By

Published : Jun 4, 2021, 7:04 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளான நேற்று (ஜூன் 3) தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியச் செயலாளர் வீ. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் ஜி.டி. யுவராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி கலந்துகொண்டு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், "கரோனா நோய்த்தொற்று காலத்தில் அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்போடு பணியாற்றுங்கள். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்" எனத் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கோபியில் கரோனா பேரிடர் உதவி மையம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details