செங்கல்பட்டு மாவட்டம் பி.வி களத்தூர் அருகேயுள்ள கல்லப்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோகிணி (17). இவர் பி.வி களத்தூரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ரோகிணி, வீடு திரும்பவில்லை. எனவே சந்தேகமடைந்த பெற்றோர், உறவினர்கள் திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில், ரோகிணியை காணவில்லை எனப் புகார் அளித்துள்ளனர். பின் மூன்று நாள்கள் கழித்து நேற்று (மார்ச்11) அதே பகுதியிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.