செங்கல்பட்டு: உய்யாலி குப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் வளைவு அமைப்பதற்கான திட்டத்தின் கீழ் 16.80கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடவில்லை என்பதனால், அமைச்சர் ஜெயக்குமார் உரையாடுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.