தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் அமைச்சர்கள் நிவாரண உதவி - Relief for people affected by the rains in Chengalpattu

செங்கல்பட்டு: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் நிவாரண உதவி வழங்கினர்.

Ministers senkottayan and Benjamin    Relief for people affected by the rains in Chengalpattu
Ministers senkottayan and Benjamin Relief for people affected by the rains in Chengalpattu

By

Published : Dec 9, 2020, 8:11 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், வயலூர் ஊராட்சியல் 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.‌ அடிப்படை வசதிகளின்றி வசித்து வரும் அவர்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதிக்கு வருகை தந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

அப்போது மாவட்ட மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் பிரவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜி, நிரஞ்சன்,மாவட்டக கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details