செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
இவற்றைத் தடுக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று (மே.24) நேரில் சென்று பார்வையிட்டார். உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் இருந்தனர்.
முன்னதாக, அமைச்சர் வருகைக்காக ஏராளமான திமுகவினர் மருத்துவமனை முன் குவிந்திருந்தனர். அப்போது அவர்களைக் கண்ட அமைச்சர், 'மருத்துவமனையைப் பார்வையிட வரும் போது இவ்வளவு கும்பல் ஏன்? அனைவரும் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கடிந்து கொண்டார்.
இதையும் படிங்க:புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!