செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஒவ்வொரு கிராமத்தினரும், மூன்று கிலோ மீட்டர்களுக்கு உள்ளாக, அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிக்ழ்ச்சியில் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு, கிளினிக்கைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழகத்தில் புதிதாக, 2,000 அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு மினி கிளினிக்கிலும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இருப்பு வைக்கப்படும்.