செங்கல்பட்டு: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு, இன்று திடீர் ஆய்வுக்காக வந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அமைச்சர் ஆய்வின்போது இன்று மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் 4 பேர் பணிக்கு வராதது தெரிய வந்தது.
இதனையடுத்து பணிக்கு வராத மகப்பேறு மருத்துவர் மெர்லின், மயக்கவியல் நிபுணர் பிரபா வடிவுக்கரசி, எலும்பியல் மருத்துவர் ஹர்ஷா பாலாஜி, தொண்டை காது மற்றும் மூக்கு மருத்துவர் கிருத்திகா ஆகிய நால்வர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.