செங்கல்பட்டு மாவட்டம் உய்யாலி குப்பம் ப தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்திற்காக ரூ.16.80கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு மற்றும் பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் சசிகலா பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது வரை கூட்டணியில் தான் உள்ளனர். கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை; எங்கள் கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளைவிட அதிக கட்சிகள் இணையும். சசிகலாவால் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் வராது. சசிகலா கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். கூலிக்கு ஆள் பிடிக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 479 பேருக்கு கரோனா!