செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வழூதூர் ஊராட்சியில் மினி கிளினிகை அமைச்சர் பாண்டியராஜன் இன்று திறந்து வைத்தார். இது மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐந்தாவது கிளினிக் ஆகும்.
அப்போது பேசிய அமைச்சர், இந்த கிளினிக் மூலம் மருத்துவமனையை எளிய முறையில் கிராமத்திற்கு கொண்டு சென்ற பெருமை முதலமைச்சரைசாரும். இந்த மாத இறுதிக்குள் இன்னும் 53 மினி கிளினிக் திறக்கப்படும் என தெரிவித்தார்.
அங்கே பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மேல் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்தது சுட்டிக்காட்டி உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.