தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருவாய்த்துறையினரின்அலட்சியம்; சென்னையிலிருந்து வந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்யாமல் அனுப்பிவைப்பு - revenue and police permitted travellers from chennai to villupuram without test

செங்கல்பட்டு: சென்னையிலிருந்து கால்நடையாக வந்த கூலித் தொழிலாளர்களை முறையாக கரோனா பரிசோதனை செய்யாமல் அனுமதித்த வருவாய்த்துறை அலுவலர்களின் செயல் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து கால்நடையாக வந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்யாமல்  அனுப்பிவைப்பு
சென்னையிலிருந்து கால்நடையாக வந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்யாமல் அனுப்பிவைப்பு

By

Published : May 6, 2020, 12:15 PM IST

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலைசெய்த எட்டு பெண்கள், ஆறு குழந்தைகள், ஆண்கள் உள்ளிட்ட 21 கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துவந்தனர்.

இதனையடுத்து சென்னையிலிருந்து நடந்தே விழுப்புரம் அருகே உள்ள அவர்களின் சொந்த ஊரான ஆற்காடு கிராமத்திற்குச் செல்ல அவர்கள் முடிவெடுத்து நடைபயணத்தை தொடங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள படாளம் என்ற இடத்தில் வருவாய்த் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

ஊரடங்கால் போக்குவரத்து இல்லாததால் சென்னையிலிருந்து நடந்து வருவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களை வருவாய்த் துறையினர் தனி வாகனம் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் இவர்களை எந்தவிதமான கரோனா, மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் அனுப்பிவைத்தது, வருவாய் துறையினரின் அலட்சியத்தை காட்டுவதாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details