செங்கல்பட்டு: விழாவில் அன்னை இல்லத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு பதக்கமும் வெகுமதியும் அளிக்கப்பட்டது.
ஆதிபராசக்தி குழும பள்ளிகளில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பதக்கங்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பெண் விடுதலை, பெண்களுக்கான சம அதிகாரம் சார்ந்து சமூக பங்களிப்பு செய்து வருபவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் விருதுகளும், வெகுமதியும் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் வெகுமதி வழங்கிய பங்காரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனரும், ஆதிபராசக்தி பள்ளிக் குழும தலைவருமான ஸ்ரீதேவி, டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கங்களையும் வெகுமதிகளையும் வழங்கினர். அன்னை இல்லத்தில் மாணவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:அம்பானி, அதானி இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் - அர்ஜூன் சம்பத்