செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தற்காப்புக் கலையில் உலக சாதனைக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், ”நிலவினை ஆராய்ச்சி செய்வதற்கு பல நாடுகள் முயற்சி செய்து, அவையனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், இந்தியா தனது முதல் முயற்சிலேயே நிலவில் நீர் உள்ளது என்பதைக் கண்டறிந்து உலகுக்கு தெரியப்படுத்தியது.
நீங்கள் வளர்வதற்கும், உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் தற்காப்புக் கலை மிகவும் அவசியம்” என்றார். இதனையடுத்து தற்காப்புக் கலைகளில் உயர்நிலைப் பதவியைத் தற்காப்புக் கலை ஆசான் கார்த்திகேயனுக்கு மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.
தற்காப்புக் கலை நிகழ்ச்சி இவ்விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள், தற்காப்புக் கலையில் பயிற்சிபெற்ற மாணவர்கள், அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஜெ. பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: அரசாணை வெளியீடு