தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக வலைதள காதல்; 2 லட்சம் மோசடி - 2 லட்சம்

செங்கல்பட்டு: சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான பெண்ணிடம் திருமண ஆசை காட்டி ரூபாய் இரண்டு லட்சம் பணம் பறித்து மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

married man arrested for cheating on young woman on social media
married man arrested for cheating on young woman on social media

By

Published : Sep 5, 2020, 9:53 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவரின் மகள் பாரதி. இவர், அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் என்பவருடன் சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.

ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவர் திருமணத்தை மறைத்து பாரதியிடம், காதலிப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பி அந்த பெண் சிறுக சிறுக சுமார் இரண்டு லட்ச ரூபாய் அவரிடம் ஆன்லைன் மூலமாகவும், வங்கி மூலமாகவும் பணத்தை வீட்டிற்கு தெரியாமல் இவருக்கு அனுப்பி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நந்தகோபால் மீண்டும் தனக்கு மேலும் 20,000 ரூபாய் வேண்டும் எனக்கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார். பின்னர் பயந்துபோன அந்த இளம்பெண் தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவரது தந்தை அணைக்கட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நேற்று (செப்.4) செஞ்சி பகுதியைச் சேர்ந்த நந்தகோபாலை அணைக்கட்டு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது தெரியவந்துள்ளது. இவர் மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details