விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(36). இவர், செங்கல்பட்டு அடுத்த தனியார் கல்லுாரி ஒன்றில் ஊழியராகப் பணியற்றி வந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் 2015ஆம் ஆண்டு 17 வயதான சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, செங்கல்பட்டு மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் காளிதாஸை கைது செய்தனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை - sexually abusing
செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று (டிசம்பர் 17) தீர்ப்பளித்த நீதிபதி அம்பிகா, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், காளிதாஸுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, புழல் சிறையில் காளிதாஸ் அடைக்கப்பட்டார்.