செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது மதுராந்தகம் அய்யனார் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் கலப்பட டீத்தூளை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் 1000 கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்தனர்.