தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருளர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய எம்எல்ஏ - mla malikai prodact giving to irular tribe

செங்கல்பட்டு: இருளர் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி வழங்கினார்.

இருளர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி!
இருளர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி!

By

Published : Apr 13, 2020, 2:11 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சமத்துவபுரம் இருளர் பகுதி மக்களுக்கு கிராமிய வளர்ச்சி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

இருளர் இன மக்களுக்கு கைகொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளின்றி தவிக்கும் 25 குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க...இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ABOUT THE AUTHOR

...view details