தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கு கரோனா - Madurantakam panchayat union engineer tests positive for corona

செங்கல்பட்டு: மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

disinfectants spread on madurantakam Panchayat Union Office
disinfectants spread on madurantakam Panchayat Union Office

By

Published : Jun 23, 2020, 3:43 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொறியாளராக பணிபுரியும் கருணாநிதி என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தொற்று காரணமாக மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முதல் மாடி பூட்டப்பட்டது. கருணாநிதியுடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மதுராந்தகத்தில் மட்டும் இதுவரை 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மதுராந்தகம் மீன் விற்பனை நிலையத்தில் நேற்று (ஜுன் 22) கூட்டம் அலைமோதியது. இதில், யாரும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காததால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க... கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்ட தலைமைச் செயலகம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details