தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியால் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம் - lost their lives due to potholes

செங்கல்பட்டு: கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியால் தவறிவிழுந்து உயிரிழந்த நபரின் உறவினர்கள், கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

By

Published : Aug 1, 2020, 12:26 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தில் செங்காட்டூர் முதல் அனுமந்தபுரம் வரை சாலை போடும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சாலைக்கான பணிகள் ஏப்ரலில் தொடங்கப்பட்டு குழிகள் தோட்டப்பட்டன. ஆனால் தற்போது வரை சாலைப் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஜூலை 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு செங்காட்டூரை சேர்ந்த மூர்த்தி(30) என்பவர் சென்னையில் இருந்து திரும்பி செங்காட்டூர் வந்தார். அப்போது சாலையில் பள்ளம் தோட்டப்பட்டது தெரியாமல் அதில் விழுந்து படுகாயமடைந்தார்.

உடனே அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு வயது பெண் குழந்தை உள்ளனர்.

இதையடுத்து இறந்தவர்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சாலையில் தடுப்பு அமைக்காமல் இருந்த அதன் ஒப்பந்தகாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள், கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டடனர்.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பெயரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: யாசகம் கேட்ட தந்தையைக் கொலைசெய்த மகன்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details