சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பொன்னுசாமி, தினம்தோறும் உத்திரமேரூர் கல் குவாரிகளில் இருந்து சென்னைக்கு ஜல்லி ஏற்றிச் செல்வது வழக்கம்.
லாரியில் ஏற்பட்ட தீ விபத்து: தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்கள்! - லாரி தீ விபத்து
செங்கல்பட்டு: மாமண்டூர் அருகே பாலாற்றை கடக்க முயன்ற லாரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதேபோல், போரூரிலிருந்து மீண்டும் உத்தரமேரூர் அருகே உள்ள கல்குவாரிக்கு ஜல்லி ஏற்ற இன்று (ஆகஸ்ட் 27) சென்றார். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே உள்ள பாலாற்றின் கரையை கடக்க முயன்றபோது, லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீ பரவியது.
இதனால் ஆற்றை கடந்து ஓரமாக நிறுத்தி பார்த்தபோது லாரி தீப்பற்ற தொடங்கியது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.