காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன், அவரது கூட்டாளிகளான செந்தில், ஜான்சன், ராஜதுரை, விக்னேஷ் ஆகியோர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாக, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளார் கண்ணனுக்கு புகார்கள் வந்துள்ளன.
கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது - Kundas to five in jail warden murder case
செங்கல்பட்டு: புழல் சிறை வார்டனை வெட்டிக் கொலை செய்த பழைய சீவரம் பகுதி குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
செங்கல்பட்டில் கொலை குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு பரிந்துரை செய்ததின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் ஏற்கனவே முன்பகை காரணமாக உள்ளூரைச் சேர்ந்த புழல் சிறை ஜெயில் வார்டன் இன்பரசுவை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றவர்கள்.