தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்! - விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

12 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்
12 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்

By

Published : Jan 27, 2021, 2:11 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது சக்தி விநாயகர் ஆலயம். பல நூறு ஆண்டுகள் பழமையான அந்த ஆலையம் மிகவும் பிரசித்தி பெற்றது. செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில், வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் புதிய வாகனங்கள் வாங்கினாலும் இந்த கோயிலில் வைத்து தான் வழிபடுவார்கள்.

இந்த ஆலயத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தற்போது இன்று(ஜன.27) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் யாகசாலை அமைத்து யாகம் வளர்த்து, பின்னர் கலசம் கோபுரம் மேல்வைக்கப்பட்டு அதன் தீர்த்தம் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் இந்த கோயிலை அகற்றி இந்த இடத்தில் வேற கட்டடம் கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அப்பொழுது மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் கனவில் யானையாக விநாயகர் தோன்றி பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.

சக்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

இதனால் அந்த ஆட்சியர் இங்கு பங்களா கட்டும் பணியை கைவிட்டு, தினம்தோறும் மாவட்ட ஆட்சியர் இந்த கோயிலில் வழிபட்டார் என்பது வரலாறு. பழமை வாய்ந்த சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் என்பதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகரைத் தரிசிக்க குவிந்த வண்ணம் உள்ளனர்

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பு நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை

ABOUT THE AUTHOR

...view details