செங்கல்பட்டு: கொளவாய் ஏரியைத் தூர்வார அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கொளவாய் ஏரி 2210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை தற்போது, 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு நகரம் மட்டுமின்றி, சென்னைக்கும் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும் எனக் கூறப்படுகிறது.
சுற்றுலாத் தலமாக மாறும் கொளவாய் ஏரி! மேலும், ஏரிக்கு நடுவே செயற்கைத் தீவுகளை அமைத்து, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. படகுக் குழாம், நடைபாதைகள், பூங்கா போன்றவற்றை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பெருமைகளைப் பறைசாற்றும், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் தெரியவருகிறது. இதற்கான பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.