தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் 60 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மீட்பு! - temple property recovered news

செங்கல்பட்டு: செய்யூர் அடுத்துள்ள, கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான, 60 கோடி மதிப்பிலான சொத்துகளை அறநிலையத் துறையினர் மீட்டுள்ளனர்.

60 கோடி மதிப்புள்ள கோவில் சொத்து மீட்பு!
60 கோடி மதிப்புள்ள கோவில் சொத்து மீட்பு!

By

Published : Feb 6, 2021, 4:20 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகேயுள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் பகுதியில், காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இதற்கு, சுமார் 20 ஏக்கர் விளைநிலம், 75க்கும் மேற்பட்ட கடைகள் போன்றவை இருந்தன. இந்தச் சொத்துகள், பல வருடங்களாக தனி நபர்கள் சிலரால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன.

இந்தச் சொத்துகளை மீட்க, அப்பகுதி மக்களும், பக்தர்களும் பல வருடங்களாகப் போராடிவந்தனர். இதற்காக, கிராம மக்கள், இந்து முன்னணி அமைப்பின் சார்பாக, மீட்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், பக்தர்களின் முயற்சியால், ஆக்கிரமிப்புகள் குறித்து, அரசுத் தரப்புக்கு பலமுறை மனுக்கள் அனுப்பப்பட்டன. இதற்காக போராட்டங்களும் நடைபெற்றன.

60 கோடி மதிப்புள்ள கோவில் சொத்து மீட்பு!

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக, வருவாய் துறையினர், கோயில் நிலங்களையும், வணிக வளாகங்களும் மீட்க, சட்டப்படி நடவடிக்கை தொடங்கினர். அதன் விளைவாக தற்போது 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்களும் பக்தர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க...செல்போனில் பேசிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்: மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details